தமிழ்நாடு சட்டசபை – பட்ஜெட் விவாதம் தொடக்கம்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் நிகழ்வாக இறந்த தலைவர்களுக்கு இரங்கல் வாசிப்பு நடந்தது.
அதனைத்தொடர்ந்து கேள்வி பதில், நேரமில்லா நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை கேட்க தயாராகி வருகின்றனர்.
பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு, நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ5000 வழங்கியது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




