--- --:--:-- --

கனிமொழியிடம் துரை வைகோ மனு..!

9

மிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்று இருந்தாலும், அது மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பதால், தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அரசு அலுவலகங்கள், உயர் அதிகாரிகளைச் சந்திப்பது, முக்கிய கோப்புகளைப் பெறுவது என்று எல்லாமே ஒரு பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது.

 

இந்தநிலையில் தான் திருச்சியை தக்க வைத்திருக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கூட்டாக திமுக எம்பி கனிமொழியிடம் திருச்சியை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

 

இந்தக் கோரிக்கைக்கு மிக முக்கியமான அடிப்படை காரணம் திருச்சியின் புவியியல் நிலை. தமிழகத்தின் சரியான மையப் புள்ளியில் திருச்சி அமைந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பயணிக்கும் போது எல்லோருக்கும் சம அளவில் அணுகக்கூடிய இடம் இது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 

ஆனால் திருச்சியை மையமாக வைத்தால் அனைத்து பகுதிகளுக்கும் சமமான தொலைவு இருக்கும். இதனால் நிர்வாக ரீதியாக மிகப் பெரிய சமநிலை ஏற்படும் என்பது பலரது கருத்து.இந்தக் கோரிக்கை புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது காலத்தில் இதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அரசியல், சமூகக் காரணங்களால் அது முழுமையாக நிறைவேறவில்லை.

 

அதன் பிறகு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை அவ்வப்போது முன்வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று (16.02.2026) திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், 2026 சட்டமன்றத் தேர்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.யை சந்தித்து, வரவிருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

 

Right Menu Icon