இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது.கடந்த 2 – 3 நாட்களாக தங்கம் விலை தலைகீழாக குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் 2 முறை அதிரடியாக உயர்ந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.
நேற்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாலையில், கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.14,270க்கும், சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.5,040 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.540 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், சவரனுக்கு ரூ.4,320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.





