--- --:--:-- --

கனிமொழி, ராகுல் காந்தியை சந்திப்பில் நெருடல் எதுவும் இல்லை: வைகோ

9

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி, காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்து, தோ்தல் தொடா்பாக பேசியதாக செய்தி வந்துள்ளது. இதில் நெருடல் எதுவும் இருக்காது. இந்தச் சந்திப்பு குறித்து விமா்சித்து பேச எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவா்.

 

திமுக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து திமுக தலைமையிடம் பேசி அதன் பின் முடிவெடுப்போம். மதிமுக எந்தச் சின்னத்தில் போட்டியிம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

 

Right Menu Icon