--- --:--:-- --

தொழில் துறைக்கு யோகம்! டாலர் மழையில் நனையப்போகும் திருப்பூர்.. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா ஒப்பந்தம்!

14

டெல்லியில் குடியரசு தின விழா களைகட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், இந்திய வர்த்தக வரலாற்றில் ஒரு ‘மெகா’ ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), மத்திய அரசின் ஒரு வழியாக இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலம், திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

 

தலை நிமிரப்போகும் திருப்பூர்!

 

டெல்லியில் 16-வது இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு, ஜனவரி 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் முன்னிலையில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆணையர் மாரோஸ் செஃப்கோவிக் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

 

பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்திய-ஐரோப்பிய உறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணம். சர்வதேச பொருளாதார சூழலில் இந்த ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல. இருதரப்பின் வளமான எதிர்காலத்துக்கான புதிய வரை படம். இந்த ஒப்பந்தம், சிறுதொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஐரோப்பிய சந்தைகளை அதிகளவில் அணுகுவதற்கு வழிவகுக்கும்” என்றார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்த வர்த்தக உடன்பாட்டிற்கு பிறகு கூறுகையில், “இது அனைத்து ஒப்பந்தங்களின் தாய்” என்று வர்ணிக்க, இந்திய வர்த்தக உலகமோ கொண்டாட்டத்தில் குதித்துள்ளது. குறிப்பாக, பின்னலாடை நகரமான திருப்பூர் இப்போது ‘நிமிர்ந்து’ உட்கார்ந்திருக்கிறது!

 

கிவ் அன்ட் டேக் பாலிஸி!

 

இரண்டு டிரில்லியன் டாலர் சந்தையை வளைக்கும் இந்த ஒப்பந்தம் வெறும் காகிதமல்ல; அது ஒரு ராஜதந்திர நகர்வு. இதுவரை இந்தியப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் இருந்த 10 முதல் 12 சதவீத வரிச் சுமை இனி ‘ஜீரோ’ ஆகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் இந்தியாவிற்குத் தடையின்றித் கதவைத் திறக்கின்றன. பதிலுக்கு, ஐரோப்பிய தயாரிப்புகளான விலையுயர்ந்த ஒயின்கள், சொகுசு கார்கள் (Audi, BMW, Mercedes), மற்றும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களுக்கு இந்தியா வரிச் சலுகை அளித்துள்ளது.

 

இது ஒரு வகையில் ‘கிவ் அண்ட் டேக்’ பாலிசிதான். ஐரோப்பாவிடமிருந்து நவீன தொழில்நுட்பமும், முதலீடும் இந்தியாவுக்கு வரும். பதிலுக்கு, இந்தியாவிலிருந்து உழைப்பு சார்ந்த பொருட்களான ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனம் மற்றும் கடல் உணவுகள் ஐரோப்பியச் சந்தையை ஆக்கிரமிக்கும். அமெரிக்கா விதித்த கடுமையான வர்த்தக வரிகளால் துவண்டு போயிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, இந்த ஒப்பந்தம் ஒரு ‘ஆக்ஸிஜன் சிலிண்டராக’ மாறியிருக்கிறது.

 

எதற்கெல்லாம் வரிச் சலுகை?

 

இந்த ஒப்பந்தத்தின்படி, சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு வரி விலக்கு அல்லது பெரும் வரி குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், தேயிலை, காபி மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை உடனடியாக பூஜ்ஜிய வரிப் பட்டியலுக்கு மாறுகின்றன. அதே சமயம், விவசாயிகளின் நலன் கருதி பால் பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட விவசாய விளைபொருட்களை இந்தியா இந்தப் பட்டியலில் சேர்க்காமல் லாவகமாகத் தவிர்த்துவிட்டது.

நுகர்வோரைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒயின் மீதான வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைந்து, காலப்போக்கில் 20 சதவீதத்திற்கு வரும். அதேபோல், 15,000 யூரோக்களுக்கு மேலான சொகுசு கார்களின் இறக்குமதி வரி 40 சதவீதமாகக் குறையப்போகிறது. அதாவது, வசதி படைத்தவர்களுக்கு இது ‘ஜாக்பாட்’. ஆனால், சாமானியர்களுக்கு இது மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலையைக் குறைக்கும் நற்செய்தியாக வந்துள்ளது.

 

நவீன சுகாதார தொழில்நுட்பங்களுக்குப் பெயர் பெற்றது ஐரோப்பா. இங்கு உற்பத்தி செய்யப்படும் சுகாதார கருவிகள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கான மருந்துகளின் விலை இந்தியாவில் குறையும். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஐரோப்பாவின் 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப அதன் சந்தை இந்திய மருத்து உற்பத்தியாளர்களுக்காக திறக்கப்படும்.

 

திருப்பூருக்கு அடித்தது லக்கி பிரைஸ்!

 

இந்த ஒப்பந்தத்தின் ஆகச்சிறந்த வெற்றியாளர் யாரென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்… அது திருப்பூர்! இதுவரை வங்கதேசம், வியட்நாம் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஐரோப்பியச் சந்தையில் வரிச் சலுகையுடன் வலம் வந்தன. இதனால் இந்தியத் தயாரிப்புகளை விட அவர்களின் ஆடைகள் 10 சதவீதம் விலை குறைவாக இருந்தன. இப்போது அந்த ‘தடைக்கல்லை’ இந்தியா உடைத்துவிட்டது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (TEA) தலைவர் கே.எம். சுப்பிரமணியன் இதுகுறித்துப் பேசுகையில் “இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. திருப்பூரின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஏற்கனவே 25 முதல் 30 சதவீதம் ஐரோப்பாவிற்குச் செல்கிறது. இனி இந்த பங்கு 40 சதவீதத்தைத் தாண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி வருவாய் 45,000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடியை நோக்கிய பாய்ச்சலாக இருக்கும். தரத்தில் நாங்கள் ஏற்கனவே உலகத்தரம்; இப்போது விலையிலும் கச்சிதமாகிவிட்டோம்!” என்கிறார் அவர்.

 

சங்க நிர்வாகிகள் சொல்வது என்ன?

 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு விதமான ‘புத்துயிர்’ தெரிகிறது. “அமெரிக்காவின் 50 சதவீத வரி நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருந்த எங்களுக்கு, ஐரோப்பா இப்போது சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. குறிப்பாக, திருப்பூரில் உள்ள லட்சக்கணக்கான பெண் தொழில

Right Menu Icon