--- --:--:-- --

பிப்.12ல் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம்!

6

த்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.

 

மாநாட்டிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த (எல்.பி.எப்) அகில இந்திய தலைவர் கி.நடராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.சவுந்தரராஜன், மாநில தலைவர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, எச்.எம்.எஸ் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி, ஐ.என்.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் டி.வி.சேவியர், ஏ.ஐ.சி. சி.டி.யு மாநில பொதுச்செயலாளர் க.ஞானதேசிகன், எல்.எல்.எப் மாநில பேரவை அமைப்பாளர் க. பேரறிவாளன், யூ.டி. யூ.சி மாநில பொதுச் செயலாளர் அ.சேக்கிழார், எஸ்.கே.எம் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் மாரியப்பன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், ஏ.ஐ.யூ.டி.சி வி. சிவக்குமார், டி.யு.சி.சி எஸ்.மாயாண்டி, எம்.எல்.எப் இரா. அந்திரிதாஸ், டபிள்யூ.பி.டி.யு.சி சம்பத், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் எல்.பி.எப் குணசேகரன், சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், எஸ்.கே. எம் சிவசூரியன், ஏ.ஐ.சி.சி.டி.யு அருண்குமார், எச்.எம். எஸ் ஞானதுரை, ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன், எல்.எல்.எப் விஜய் பாலு, யு.டி.யு.சி சிவசெல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

ஆயத்த மாநாட்டு கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய தொ.மு.ச நடராஜன் பேசியதாவது, திருத்தப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில் ஊதிய வன்முறையில் குழப்பம் நிலவுகிறது. மத்திய அரசு குழு கூறுவதை மாநில அரசு கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. அபாயகரமான இந்த சட்டத் தொகுப்பு அவசரகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனைத் தமிழகத்தில் அமல்படுத்தாமல் தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. பா.ஜ.க தலைமையிலான அரசு தமிழகத்தில் அமைந்தால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை தமிழகத்தில் எளிதாக அமல்படுத்தி விடும்.

 

இதை யாரும் தடுக்க முடியாத சூழல் உருவாகும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.

 

விவசாயிகள் சங்க தலைவர் கே. வி. இளங்கீரன் பேசுகையில், தனது பணக்கார நண்பர்களுக்காக பிரதமர் மோடி இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தனியார்மயத்தை நோக்கி இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் மற்றும் விதை சட்டம் தொழிலாளர் வதைக்கும் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றார்.

 

மத்திய அரசு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு புதிய சட்டத்தால் எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று விளக்கியவர், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம் என்றார்.மத்திய மோடி அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், பிப்ரவரி 12 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

Right Menu Icon