--- --:--:-- --

ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் : பெ. சண்முகம்

7

ரசாங்கம் தயாரித்துக் கொடுக்கிற ஆளுநர் உரை என்பது, இந்த மாநில மக்களின் தேவைகளை, அரசின் திட்டங்களை விளக்குகிற ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடு. அதில் தன் இஷ்டத்திற்கு மாற்றங்களைச் செய்யவோ, பத்திகளைத் தவிர்க்கவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து சட்டமன்ற மரபுகளைத் துச்சமாகக் கருதி, சபையிலிருந்து பாதியிலேயே வெளியேறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இது ஏழரை கோடி தமிழ் மக்களையும், இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் இழிவுபடுத்துகிற செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon