ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தவிர்க்க முடியாத காரணங்களினால் ஜனநாயகம் திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. கடந்த டிசம்பர் 19ம் தேதியே திரைப்படம் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்தப் பிறகும், இதுவரை தணிக்கைக்குழு படத்திற்குச் சான்றிதழ் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன் காரணமாக, படம் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில்,ஜனநாயகம் திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்தது. வசூலில் மிகப்பெரிய சாதனைபடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக திரைத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




