இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 1140 கி.மீ. தொலைவில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் மேற்கு – வடக்கு மேற்கு திசையில் அது நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூரில் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




