முதியவர்களைக் குறிவைத்து செல்போன் பறிப்பு- 4 பேர் கைது
தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களைக் குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாம்பரம் போலீசார் நால்வரையும் பிடித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்ட செலவுக்காக தற்போது திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசில் அவர்கள் தெரிவித்துள்ளனர்





