--- --:--:-- --

40 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக குறைந்த சென்னை வாக்காளர்கள்!

4

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதலில் மாவட்டங்கள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

 

அதன்படி 16 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சென்னை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பாக மொத்தம் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சென்னையில் மட்டும் 35.58% வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடம் பெயர்ந்தவர்கள் 12,22,164 நபர்களும், 1,56,555 இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon