--- --:--:-- --

நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

4

75 வயதை எட்டியிருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ரஜினிகாந்த்  வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

 

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் இன்று மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. அதே நேரம் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ காட்சிகள் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon