என்ன நடந்தாலும் இபிஎஸ் தலைமை தான் – நயினார் நாகேந்திரன்
த.வெ.க.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்குத் தோல்விதான் கிடைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான். த.வெ.க.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்குத் தோல்விதான் கிடைக்கும்.
இந்தத் தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியமைக்கும்.டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார்.
என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




