காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்பூரில் தொல்லை!
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால் நாளொன்றுக்கு ரூ.585 சம்பளத்தைப் பெறும் முகமதுயாகத்அலி என்ற நபரின் அத்துமீறல்கள், பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளன.
போலீஸ் வாகனத்தில் ரோந்துக்குத் துணையாகச் சென்றுவிட்டு, அதிகாலையில் காக்கிகள் கிளம்பியதும் களத்தில் இறங்குவதுதான் இந்த நபரின் முதல் வேலை. ஆம், சம்பளப் பணம் போதவில்லை என்ற அற்ப காரணத்துக்காக, ‘போலீஸ்’ என்ற அதிகாரம் அளிக்கும் பெயரைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார் யாகத்அலி.

அதிகாலை நேரத்தில் வியர்வை சிந்தி உழைக்க வரும் அப்பாவி விவசாயிகள், காய்கறி வண்டிகள், பால் வண்டிகளின் ஓட்டுநர்களை வழிமறித்து, மிரட்டிப் பணம் பறிப்பதுதான் இவரது அன்றாட வாடிக்கை என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர். “ஏண்டா, அதிகாலையில ஒருத்தன் வயித்துப் பொளப்புக்கு கூலி வேலைக்கு போனா, அதை மறிச்சு உழைக்கிற பணத்தைப் பறிக்க உனக்கு மனசு எப்படி வந்தது? நீ என்ன போலீஸா? ஒரு ‘கூலிப்’படை போல செயல்படுற உன்னால தான் ஒரிஜினல் போலீஸ் மேலேயே வெறுப்பு வருது!” என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆவேசப்படுகிறார்கள்.
யாகத்அலியின் அத்துமீறல்கள் பணம் பறிப்பதோடு நிற்கவில்லை. இதுதான் பொதுமக்களின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. தனியாக இருக்கும் இளம் தம்பதியினரை மறித்து, அடையாள அட்டை சரிபார்ப்பது போல் நடித்து, பெண்களின் செல்போன் நம்பர்களை வாங்குவது, பின்னர் அவர்களுக்கு ரகசியமாக மெசேஜ் அனுப்புவது என ஒரு சைக்கோத்தனமான வலைவிரிப்பைத் தொடங்கியுள்ளதாக, இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

“போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு, ஒரு பெண்ணின் நம்பரை மிரட்டி வாங்குற தைரியம் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் ஒரு லோக்கல் ரோமியோ மாதிரி பண்ற சேட்டைக்கெல்லாம், ஒரிஜினல் போலீஸ் அதிகாரி மாதிரி ‘கெட்-அப்’ வேற! நாங்க நியாயம் கேட்கப் போனா, எங்க மேலேயே கேஸ் போடுவாங்களோன்னு பயமா இருக்கு,” எனப் பெண்கள் நடுங்குகிறார்கள்.
கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள், வெளியூர்களில் இருந்து வந்து பனியன் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண்கள்தான் இவரின் முக்கிய இலக்கு. நைஸாகப் பேசி நெருங்கி, ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று நட்பை வளர்த்து, பின்னர் ‘போலீஸ்’ என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி, அவர்களைப் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கொடூரமான குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன. “இப்படி ஒருத்தன் நம்ம திருப்பூர் மண்ணுல சுத்துறதுக்கே வெட்கமா இருக்கு. இவனை இன்னும் ஏன் போலீஸ் துறைக்குள்ள வெச்சிருக்காங்க? இவன் செஞ்ச அத்தனை அட்டூழியத்துக்கும் இவனுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்“ என்று மக்கள் கொந்தளிக்கின்றனர்.
யாகத்அலியின் இந்த ராஜ்ஜியத்துக்குப் பின்னால், கண்ணியமிக்க திருப்பூர் காக்கிச் சட்டைகளுக்குள்ளும் இருக்கும் சில ‘சபலிஸ்ட்’களின் ஆசி இருப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகப் புகார் அளிக்கத் தயங்குவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த அதிகாரிகளின் பின்னணி பலம்தான், முகமது யாகத் அலிக்கு இவ்வளவு தைரியத்தை கொடுத்திருக்கிறது.
மேலும், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு காட்டிக்கொண்டு ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டு அதிக ஃபாலோயர்களைச் சேர்த்து, அதன் மூலமாகவும் அப்பாவிப் பெண்களுக்கு வலைவிரிக்கிறாராம் இந்த முகமூடி முகமதுயாகத்.
இவரைப் போன்ற சமூக விரோதிகளுடன் கைகோத்துக்கொண்டு சில சட்டவிரோதச் செயல்களைச் செய்யும் பெண்களும் கூட்டணி அமைத்து, பண மோசடியில் ஈடுபடுவதாகவும், யாகத் அலியின் தயவால் அவர்கள் பயமின்றி செயல்படுவதாகவும் இன்னொரு அதிர்ச்சித் தகவல். திருமணமாகி, குழந்தையுள்ள ஒருவன் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காக இப்படிப்பட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
யாகத் அலியின் அட்டூழியங்கள், பெருமைமிகு திருப்பூர் காவல் துறையின் நற்பெயருக்குக் கடும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “தற்காலிகப் பணிக்காக எடுக்கப்படும் இவர்களை போன்ற நபர்களை ஏன் முழுமையாகக் கண்காணிக்கவில்லை?” என்ற நியாயமான கேள்வி பொதுமக்களிடம் இருந்து எழுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உடனடியாகத் தனி கவனம் செலுத்தி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முகமதுயாகத்அலியின் பின்னணியை விசாரித்து, அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இதுவரை செய்த குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதுதான், திருப்பூர் காக்கிச் சட்டைக்கு மீண்டும் பெருமை சேர்க்கும்.
“உண்மையான போலீஸ் அதிகாரம் என்பது மக்களைப் பாதுகாப்பது! மிரட்டிப் பணம் பறிப்பதும், பெண்களை அத்துமீறுவதும் அல்ல! இந்த விவகாரத்தில் திருப்பூர் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, காக்கிச் சட்டை மீது படிந்திருக்கும் இந்த கறையைத் துடைப்பார்கள் என்று நம்புவோம்.






