--- --:--:-- --

நிவேதா பெத்துராஜ்-க்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

4

மிழ்நாட்டில் தெரு நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கட்டிப்பது வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்துவதால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லமால், தெரு நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பல செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தெருநாய்களை ஒழிக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் 4.8 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 48-ஆக இருந்தது. கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டில் அதிகளவில் பொதுமக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் தெருநாய்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் தெருநாய்களுக்கு எதிராக கண்டன குரல் எழும்பினாலும் மறுபுறம் அதை பாதுகாக்க வலியுறுத்தி பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்து கொண்டார்.

 

இதில் பலர் தங்கள் வளர்ப்பு நாய்களை அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பேரணியாக நடந்து சென்றனர்.

 

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ், ”இந்த உலகத்தை அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். நாய்கள் மனிதர்களை கடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ரேபிஸ் நோய் தொற்று மிகவும் மோசமானது. ஆனால் அதில் மக்களை அச்சம் ஏற்பட வைப்பதை விட அதற்கு ஒரு தீர்வு கண்டறிவது மேலானது.

 

சிறுவயது முதல் நாய் கடிகளிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் நம்மிடம் தவறாக நடந்து கொண்டால் அவரை கொலை செய்ய வேண்டும் என யாரும் கூறுவதில்லை. அதேபோல விலங்களிடமும் இருக்க வேண்டும். தெரு நாய்கள் அகற்றுவதே ஒரே தீர்வு கிடையாது. நாய்கள் குறைந்து விட்டால் குரங்குகள் அதிகரிக்க தொடங்கிவிடும்.

 

பராமரிப்பு மையங்களில் அடைக்கப்படும் நாய்கள் அவற்றுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். இதற்கு ஒரு தீர்வாக இருப்பது, பிடித்து வரப்பட்ட நாய்களை தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும்” என்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்க துபாயில் வசித்துக் கொண்டு இங்கே தெரு நாய்களுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதா? என்று இணையத்தில் கமெண்ட் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

Right Menu Icon