--- --:--:-- --

இந்தியாவிலேயே நெல்லை மாவட்டத்தில் அதிக மழை..!

5

மிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டிருந்த கனமழை அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சில மணிநேரங்களிலேயே ‘டபுள் செஞ்சுரி’ மழைப் பதிவை (200 மி.மீ-க்கு மேல்) எளிதாகத் தொடும் வல்லமை படைத்த இடங்களாக மாஞ்சோலை உள்ளது என பிரதீப் ஜான் தனது தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், நெல்லை மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதி 2057 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது.

 

இதை விட இன்னும் அதிக மழைப்பொழிவை ஊத்து பகுதி பதிவு செய்துள்ளது. ஊத்து பகுதி 2075 மி.மீ மழையைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் (TNSDMA) சமீபத்திய கனமழை அறிக்கையின்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon