கோவை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!
கோவையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலையில் சுட்டுபிடித்தனர். காலில் குண்டு காயத்துடன் பிடிக்கபட்ட மூவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரபட்டுள்ளது. கோவைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே மருத்துவமனைக்குள் அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




