--- --:--:-- --

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

3

ங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மியான்மர் மற்றும் அதை ஒட்டிய அந்தமான கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

எனினும், தமிழ்நாட்டில் ஒருவாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த 31.10.2025 மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (01.11.2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை, அதே பகுதிகளில் நிலவுகிறது என்று கூறியிருந்தது.

முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த 31.10.2025 மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (01.11.2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை, அதே பகுதிகளில் நிலவுகிறது என்று கூறியிருந்தது.

மேலும் அது அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேலும், கிழக்கு-வடகிழக்கு திசையில், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மஹாராஷ்ட்ரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon