--- --:--:-- --

தவெக நிர்வாக குழுக் கூட்டம் இன்று கூடுகிறது..!

1

மிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகளை ஒருங்கிணைக்க, புதிய நிர்வாகக் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரம் சம்பவம் நிகழ்ந்து, சரியாக ஒரு மாதம் கழித்து, உயிரிழந்தோர் குடும்பத்தினரை, மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு முன்பு, அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி, வங்கிக் கணக்கின் மூலம் தவெக சார்பில் அளிக்கப்பட்டது.

இதன் நடுவே, அந்த கட்சியிலிருந்து எந்தவொரு நிகழ்வும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை, விஜய் நியமித்துள்ளார். இந்த குழுவில், பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பாெதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆறுதல் கூட்டத்தின்போது, தவெக பொருளாளர் வெங்கட்ராமன் செல்ல பவுன்சர்கள் அனுமதி மறுத்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய நிர்வாகக் குழுவில் அவரது பெயர் இடம்பெறவில்லை. வழக்கமாக புதிய அறிவிப்பின்போது ஆனந்த் வழிகாட்டுதலின்படி செயல்படும் எனக் குறிப்பிட்டு வந்த விஜய், தற்போது தனது வழிகாட்டுதலின் படி புதிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை (இன்று) காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon