--- --:--:-- --

மத்திய அரசுக்கு முதலமைச்சர் காட்டமான கேள்வி!

2

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன் என்று மத்திய பாஜக அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு 10 கேள்விகளை எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

 

அதன்படி, ஊழல்வாதிகள் பாஜக-வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங்மெஷினில் வெளுப்பது எப்படி என்று வினவியுள்ளார்.
நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம் என்று விமர்சித்துள்ள முதலமைச்சர், மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன் என்றும் சாடியுள்ளார்.

 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றும் மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன் என்றும் வினவியுள்ளார். இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன் என்றும் கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் பதில் வருமா? அல்லது வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா என்றும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon