--- --:--:-- --

தங்கத்தின் விலையில் புதிய திருப்பம்..!

3

சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகி நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வந்தது.

 

ஒரு சவரன் ஒரு லட்சத்தை எட்டும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏறிமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று (அக்டோபர் 18) காலை திடீர் திருப்பமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து, 95600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம், 11950 ரூபாய்க்கு விற்பனையானது.

 

இந்நிலையில் காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலை 50 ரூபாய் உயர்ந்து விற்கப்பட்டது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96,00க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,525க்கும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,525க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,200க்கும் விற்பனையானது.<br />அதே போல, 18 காரட் தங்கம் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,900க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.79,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளிளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon