--- --:--:-- --

காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: அன்புமணி

5

மிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியான உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.

 

கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வேளாண்மைத் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த உரங்களைப் பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon