--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் விலையில் 6 மாதங்களுக்கு பிறகு வந்த மாற்றம்..!

1

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆறு மாதங்களுக்குப் பின் உயர்ந்துள்ளது.

 

அந்தவகையில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆறு மாதங்களுக்குப் பின் உயர்ந்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இன்று 16 ரூபாய் உயர்ந்துள்ளது.

 

கடந்த மாதம் 1738 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1754 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.

 

வணிக பயன்பாடு சிலிண்டரின் விலையை பொறுத்தவரை நடப்பாண்டில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் ஐந்தரை ரூபாய் விலை உயர்ந்திருந்தது. அதன்பிறகு விலை குறைந்துகொண்டே வந்த நிலையில் 6 மாத காலத்திற்குப் பிறகு தற்போது விலை அதிகரித்துள்ளது. எனினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ரூ.868.50 என்ற பழைய விலையிலேயே விற்கப்படுகிறது.

Right Menu Icon