த.வெ.க கொடிக்கு தடை கோரி மேல்முறையீட்டு மனு.. விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்..!
த.வெ.க கொடிக்கு தடை கோரும் மேல்முறையீட்டு மனு மீது விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. த.வெ.க கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மனு தாக்கல் செய்துள்ளது.
கோரிக்கைகளை தனி நீதிபதி முறையாக பரிசீலிக்காமல் த.வெ.க கொடிக்கு தடை விதிக்காமல் உத்தரவு பிறப்பித்தார் என மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய கொடியைப் போல் இருப்பதால் விஜய் கட்சிக் கொடுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.






