50 பந்துகளில் சதம்: விராட்கோலி சாதனையை உடைத்த ஸ்மிருதி மந்தனா
டெல்லியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலிய இடையிலான 3வதுஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா, 50 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன் மூலம் இந்தியாவுக்கான ஆடவர், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்,50 பந்துகளில் அதிகவேக சதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியின்52 பந்துகளில் சதம் என்ற சாதனையை உடைத்தார் ஸ்மிருதி மந்தனா.






