--- --:--:-- --

சம்பள கமிஷன் கேட்டு பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

6

திருச்சி, பொன்மலை பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் ரயில்வே பணிமனை நுழைவு வாயிலில், எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. 1968ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்கூட்டம் நடந்தது.

 

கூட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.8-வது ஊதியக் குழுவை (Pay Commission) தாமதமின்றி அமைக்க வேண்டும். புதிய ஊதிய விகிதங்களை 01.01.2026 முதல் அமல்படுத்த வேண்டும்.

 

‘பைனான்ஸ் பில் 2025’ மற்றும் ‘வாலிடேஷன்’ என்ற சட்ட மசோதாக்களைக் காரணம் காட்டி, புதிய ஊதியத்தை அமல்படுத்துவதைத் தள்ளிப் போடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில்வேயில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

 

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Right Menu Icon