சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்!
சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஆனால், கோர்ட் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானதால், அதை மீண்டும் கொண்டு வந்து சோதித்த போது, தங்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.






