--- --:--:-- --

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை..!

2

மிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், சென்னையில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

 

இன்றும் சென்னையில் மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், வெயில் 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

இந்நிலையில் காலை 10 மணிவரையிலான அடுத்த 3 மணிநேரத்திற்கான மழை முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon