பெரம்பலூரில் விஜய் பரப்புரை ரத்து..!
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை பயணம் ரத்தானதால், தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தொடர்ந்து அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலாவதாக, திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்ய விமானம் மூலம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்திலேயே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் பரப்புரை பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.
செம்பருத்தி டீ குடிப்பதால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள்.!
செம்பருத்தி டீ குடிப்பதால் கிடைக்கும் 8 அற்புதமான நன்மைகள்.!
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற விஜய், 5 மணி நேர பயணத்திற்குப் பிறகே மரக்கடை பகுதியில் மக்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, அரியலூருக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடைந்த விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர் பெரம்பலூரில் பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் கால தாமதம் காரணமாக அங்கு பரப்புரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பெரம்பலூரின் குன்னம் பகுதிக்கு வந்த விஜய், மக்களை பார்த்து கையை மட்டும் அசைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு பரப்புரை ரத்து செய்யப்பட்டதாகவும், பெரம்பலூரில் மற்றொரு நாள் விஜய் பரப்புரை மேற்கொள்வார் எனவும் தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






