--- --:--:-- --

ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்..!

3

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சோழன், மலைக்கோட்டை ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருச்சி இடையேயான சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10 ஆம் தேதி வரை காலை 8.12 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும். அதேநேரத்தில் மறுமார்க்கத்தில் அந்த ரயில் வழக்கம்போல் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 4.45 மணிக்கு சென்னை வரும் நிலையில், தாம்பரத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் வழக்கம்போல் எழும்பூரிலிருந்தே புறப்படும். இதேபோல ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு காலை 6.35க்கு வரும் ரயிலும், காலை 6.45 மணிக்கு வரும் ரயிலும் தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.

 

சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி விரைவு ரயில், எழும்பூருக்குப் பதில், காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Right Menu Icon