--- --:--:-- --

பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு..!

4

சாதி மற்றும் வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்களைப் பணி இடமாற்றம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீதான புகார் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதேபோல மாணவர்களின் சாதி தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாணவர்களின் சாதி தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்கும்போதும் தொகையை வழங்கும்போதும் அவர்களைத் தனித்தனியாக தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு அழைத்து விவரம் தெரிவிக்கப்படல் வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஸ்காலர்ஷிப் தொடர்பான பதிவேடு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாகப் பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்துதல் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அதனைத் தலைமையாசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்து மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மாணவர் மனசு என்ற பெயரிலான புகார் பெட்டி மூலம் பெறப்படும் புகார்கள் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Right Menu Icon