கிரகணம் நிறைவு: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறப்பு
சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11½ மணி நேரம் மூடப்பட்டது. வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணியில் இருந்து அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது.
நேற்று மாலை 3.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி மூடப்பட்டன. இன்று அதிகாலை 3 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் தொடர்கிறது.






