பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அ.தி.மு.க.வே காரணம்..!
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்ததே அ.தி.மு.க.தான். அந்த திட்டத்தை தி.மு.க. தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. குண்டர்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். தலைவர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கும் சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிற போது சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும் எனத் தெரியவில்லை என்றார்.






