--- --:--:-- --

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் பரவல்!

2

மிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் பரவல் இருப்பதாகவும் அச்சம் அடையும் அளவுக்கு தாக்கம் இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வார காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.

 

இது சாதாரண இன்புளூவன்சா காய்ச்சல் மட்டுமே என்றும் புதிய வகை வைரஸ் தொற்று அல்ல என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 50 சதவீத நோயாளிகளுக்கு “இன்புளூவன்சா ஏ தொற்று” பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதம் இன்றி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் பொது சுகாதார துறை இயக்குநர் ஆலோசனை நடத்தினார். காய்ச்சல் பரவும் இடங்களைக் கண்டறிந்து அந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Right Menu Icon