தருமபுரி: வகுப்பறையிலேயே டீச்சருக்கு “மசாஜ்”
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையிலேயே டீச்சருக்கு, மாணவர்கள் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை, கை, கால்களை அழுத்திவிட்டு மசாஜ் செய்ய சொல்லி இருக்கிறார் டீச்சர் கலைவாணி.
இதை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.






