--- --:--:-- --

புற்றுநோயுடன் போராடி வந்த நடிகை உயிரிழப்பு..!

3

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை ப்ரியா மராத்தே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 38. மாராத்தி மற்றும் இந்தி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் நடிகையாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ப்ரியா மராத்தே. கடந்த 2008-ம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘ஹம்னே ஜீனே சிக்லியா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

2017-ல் ‘தில் அனி இதர்’ படத்தில் நடித்திருந்தார். இது தவிர ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல்வேறு சீரியல்களல் நடித்துள்ளார் ப்ரியா. இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான சித்தார்த் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு ப்ரியா திருமணம் செய்துகொண்டார்.

 

2023-ம் ஆண்டுக்குப் பிறகு புற்றுநோய் காரணமாக சிகிச்சையிலிருந்த நடிகை ப்ரியா பொதுவெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். திரைப்படங்கள், சீரியல்கள் என படப்பிடிப்பை தவிர்த்து வந்தவர், தொடர் சிகிச்சையிலிருந்தார். மீண்டு வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு காத்திருந்தனர்.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார் ப்ரியா மராத்தே. அவருக்கு வயது 38. அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான அவருடன் பணியாற்றிய சுபோத் என்பவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அவர் ஒரு சிறந்த நடிகை. என்னுடன் சில சீரியல்களில் நடித்துள்ளார். இந்த துறைக்கு வந்த பிறகு அவரது கடின உழைப்பு நிச்சயம் போற்றத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

 

மேலும், “புற்றுநோய் பாதிப்பு அவரை விட்டு நீங்கவேயில்லை. கடைசியாக அவர் நடித்த சீரியல் படப்பிடிப்பின்போது கூட புற்று நோய் பாதிப்பால் பல சிரமங்களை எதிர்கொண்டார். அவரது இந்த பயணத்தில் உறுதுணையாக நின்றவர் அவரது கணவர். ப்ரியா ஒரு போராளி. அவர் எங்கியிருந்தாலும் நிம்மதியுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

Right Menu Icon