--- --:--:-- --

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

1

மிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு வாழும் அயலக தமிழர்கள் மத்தியில் சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் செயலாளர்களுடன் பெர்லின் சென்றடைந்த முதலமைச்சரை, “ஸ்டாலின் அப்பாவை வரவேற்கிறோம்” என்ற பதாகையை ஏந்தியபடி அயலக தமிழர்கள் வரவேற்றனர்.

 

அவர்களுடன் முதலமைச்சர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஜெர்மனிவாழ் தமிழ்க் குடும்பங்களின் பாசமிகு வரவேற்பு நெகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் பெருமையுடன் முன்னேறுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், நேற்று அந்நாட்டின் கலோன் (Cologne ) நகரில் அயலகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளர்ச்சியடைந்த நாடுகளை போன்று தமிழ்நாடும் வளர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

மேலும் உங்களால் முடிந்த உதவிகளை உங்கள் தாய் மண்ணுக்கு செய்ய வேண்டும். நீங்கள் செய்வது சிறிய தொழிலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடங்குங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் சந்தித்துப் பேச உள்ளார். பின்னர் வரும் 7ஆம் தேதி ஒரு வார வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் தாயகம் திரும்ப உள்ளார்.

Right Menu Icon