சென்னையில் மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு..!
சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.





