ஐ.பெரியசாமிக்கு விரைவில் சம்மன் அனுப்ப முடிவு..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றொரு மகன் பிரபு, மகள் இந்திராணி ஆகியோர் வீடு உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ந்தேதி அதிரடி சோதனை வேட்டையில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




