திருப்பூரில் இரு வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர் கைது!
திருப்பூர் மாநகரம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டயாம்பாளையம் பிரிவு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட இடத்தில் மங்கலம் காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது முகமது ராஜா(37) என்கின்ற நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளையக்காடு பஸ் ஸ்டாப் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேற்கண்ட இடத்தில் வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது லட்சுமணன்(60) என்கின்ற நபர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் மேற்கண்ட எதிரி மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




