ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், குன்னத்தூர் பேரூர் செயலாளர் கவுன்சிலர் சரண்பிரபு தலைமையில், நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான, துணை ஜனாதிபதி பதவிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை அவர்களது இல்லத்தில் இன்று காலை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.