--- --:--:-- --

ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

10

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

 

 

இந்த அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon