கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்..!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான 87 வயதான வசந்தி தேவி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக ஆர்.கே. நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் கல்வியாளர் வசந்தி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




