திருப்பூர் குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல்!
திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று பள்ளிக்கு சென்ற 1ம் வகுப்பு சிறுமிக்கு, பாலியல் தொல்லை செய்த, அஸ்ஸாம் மாநில இளைஞர் ஜெய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





