பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போரை நிறுத்தினோம் – அமித்ஷா விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாகவும், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மக்களவையில் அமித் ஷா விளக்கமளித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,”பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்த பிரதமர் மோடி ஒப்புதல் கொடுத்தார். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சுலைமான் உள்பட 3 பயங்கரவாதிகள் ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக் கொலை செய்யப்படனர்.” என்றார்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகள் பஹல்காம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டவை. பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகள், சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. இதைவிட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசுகையில் அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசினார். பயங்கரவாதிகளின் ஆதாரங்களை கேட்பது பாகிஸ்தானை காப்பாற்றுவதற்கான சூழ்ச்சி. பா.சிதம்பரம் பாக்.-ஐ காப்பாற்ற முயல்கிறாரா? எனவும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி பேசினார்.






