--- --:--:-- --

திருவாடானையில் ஸ்ரீ முத்து மாரியம்மன் வெள்ளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது!

13

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தென்கிழக்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 95 ஆம் ஆண்டு ஆடி கலரி உற்சவ விழா ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது வருகிற ஜூலை 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குடம், வேல் காவடி எடுத்தலும், பூக்குழி இறங்கும் நிகழ்வைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை அன்னதானமும் நடைபெற உள்ளது.

 

கோவிலுக்கு புதிதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் வெள்ளி சிலை 2.5 கிலோ அளவில் சுமார் 5 லட்சம் செலவில் உபயதாரர்களால் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. திருவாடானை நகருக்குள் மேளதாளங்கள் முழங்க வீதி உலாவாக வந்து கோவிலை அடைந்த சிலைக்கு பக்தர்கள் ஆராத்தி எடுத்தும், தீபா ஆராதனை காண்பித்து வழிபட்டனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

 

 

திருவாடானை தென்கிழக்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 95 ஆம் ஆண்டு ஆடி கலரி உற்சவ விழா ஜூலை 15 செவ்வாய்க்கிழமை துவங்கி ஜூலை 22 செவ்வாய்க்கிழமை பால்குடம், வேல் காவடி, பூக்குழி இறங்கும் நிகழ்வு, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெறும். 2.5 கிலோ வெள்ளி ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை 5 லட்சத்தில் உபயதாரர்களால் செய்யப்பட்டு அரிமழத்தில் இருந்து திருவாடானைக்கு கொண்டுவரப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon