--- --:--:-- --

குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது? – டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன்

1

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

 

10 ஆம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட இத்தேர்வை, மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 83 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 38 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

 

இந்நிலையில், பல்வேறு இடங்களில் தாமதமாக சென்ற தேர்வர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, திருவாரூரில் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் தங்களை அனுமதிக்க கோரி தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, திண்டுக்கல்லில், தேர்வுக்கு தாமதமாக சென்ற தேர்வர்கள், தங்களை உள்ளே அனுமதிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் தேர்வுக்கு தாமதமாக சென்ற தேர்வர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தேர்வு முடிவு எப்போது? இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

 

குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.சுமார் 14 லட்சம் பேர் எழுதும் இத்தேர்வின் முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும் பிரபாகர் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon