--- --:--:-- --

இனி தமிழ்நாட்டு தொடக்க கல்வியில் புதிய மாற்றம் – பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவு

2.1

தமிழ்நாட்டில் தொடக்க பள்ளிகளில் பா வடிவில் மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு அஜூ வர்கீஸ் நடிப்பில் வெளியான “ஸ்தானர்தி ஸ்ரீகுட்டன்” என்ற படத்தில் மாணவர்கள் மத்தியில் BACK BENCHERS என்ற பாகுபாடு இல்லாத வகையில், பா வடிவில் அவர்களை அமர வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து கேரளாவில் பல பள்ளிகள் இந்த இருக்கை முறையை பின்பற்றத் தொடங்கின.

 

இந்நிலையில் இந்த நடைமுறையை தொடக்க பள்ளிகளில் பின்பற்ற அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், வகுப்பறைகளில் மாணவர்களை சவுகரியமாக அமர வைப்பது அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும், உரையாடலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மாணவர்களால் ஆசிரியரையும், கரும்பலகையும் தெளிவாக பார்க்க முடியும், மாணவர்களை எளிதாக கண்காணிக்க முடியும், சிறப்பு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பின் இருக்கை மாணவர்கள் என்ற பாகுபாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon