--- --:--:-- --

தூத்துக்குடியில் நடிகர் மிர்ச்சி சிவாவை பார்த்து சாத்தான் என குறிப்பிட்ட ரசிகர் ஒருவரால் அதிர்ச்சியான நடிகர் சிவா.!

11

டிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர் ராம் ஆகியோர் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள ஓர் திரையரங்கில் இன்று நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர் ராம், மகன் வேடத்தில் நடித்த சிறுவன் மிதுல்ராயன் ஆகியோர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ரசிகர்கள், நடிகர் சிவா மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் கல, கல என பேசி மகிழ்ந்தனர்.

 

அப்போது ரசிகர்கள் இயக்குனர் ராமிடம், ஆனந்த யாழை திரைப்படம் நன்றாக இருக்கும். அதே போன்று தமிழ் சினிமா படங்கள் பல கொடுக்க வேண்டும் என்றனர். கண்டிப்பாக பல படங்கள் வரும் என்றார். நடிகர் சிவா பேசும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. பல திரையரங்குகளுக்கு சென்று இருக்கின்றேன். அங்கு ரசிகர்களை சந்தித்து இருக்கின்றேன். ஆனால் யாரும் சாத்தான் என்று என்னை குறிப்பிட்டது இல்லை. ஆனால் நீங்கள் அன்பாக என்னை சாத்தான் என்று குறிப்பிடுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் அன்பு தெரிகிறது என்றார்.

பின்னர், நடிகர் சிவாவிடம் ரசிகர்கள் பேசும்போது, இந்தப் படத்திற்காக ஓடி, ஓடி உழைத்து இருக்கிறீர்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொண்டோம் என்றனர். ஆமாம், படத்தில் வெயிலில் ஓடியதை வைத்து கூறுகிறீர்கள். உண்மைதான். 10 கிலோ குறைந்து விட்டேன் என்றார்.

 

பின்னர் இயக்குனர் ராமிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்., ஏன் இந்த படத்தை இவ்வளவு வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ளீர்கள். சிறந்த இயக்குனரான நீங்கள் பல படங்கள் இயக்க வேண்டும் என்றனர். ஆமாம், இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் மேலும் அடுத்தடுத்த படங்கள் இயக்க இருக்கின்றேன். ‘ஏழுகடல் ஏழுமலை’ படம் மூன்று மாதத்தில் வந்துவிடும் என்றார்.

 

பின்னர் இயக்குனர் ராமிடம், உங்களுக்கு crush ஏதும் உள்ளதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்., crush இல்லாமல் பள்ளி, கல்லூரியில் வாய்ப்பு இல்லை. உலகத்தில் தினமும் சூரியன் நிலா உதிக்கின்ற மாதிரி crush உண்டு என்ற அவர், தற்போது சிறுவர்கள் அனைவரும் அதிகமாக தகாத வார்த்தை பேசுகிறார்கள். அதுவும் இன்டர்நேஷனல் வார்த்தைகளாக உள்ளது. குழந்தை கேட்கக்கூடிய கேள்வி நாம் நமது தந்தையிடம் கேட்டதை விட அதிகமாக உள்ளது.

 

என் மகன் வாட்டர் பாட்டிலை தொலைத்து விட்டான். அப்போது அவனிடம் கோபப்பட்டு வாட்டர் பாட்டில் எங்கே என்றேன். ஏன் திட்டுகிறாய்., யாரோ வாட்டர் பாட்டில் எடுத்து விட்டார்கள் அதற்கு நான் என்ன செய்வேன் என்று கோபமாக பதில் அளித்தான். ஆக, குழந்தைகள் வேற மாதிரி பேச தொடங்கி விட்டார்கள். நம் காலத்தில் அப்பாவுடன் துணிந்து இவ்வாறு பேச மாட்டோம். ஆனால் தற்போது சிறுவர்கள் அவ்வாறு அல்ல., அவர்களுக்கு வெளி உலகம் தெரிய வேண்டும் என்றார். மேலும், இதனைத்தொடர்ந்து ரசிகர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon