நடிகர் சூரியின் நடிப்பில் உருவான ஏழு கடல், ஏழு மலை திரைப்படம் எப்போது வெளியாகும்? இயக்குனர் ராம் update.!
நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர் ராம் ஆகியோர் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
படத்தின் பிறமோஷனுக்காக தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் மிர்ச்சி சிவா, இயக்குனர் ராம், சிறு கதாபாத்திரத்தில் நடித்த மிதுல்ராயன் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்து அவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ராம், ‘பறந்து போ’ என்ற திரைப்படம் மூலம் தூத்துக்குடியில் முதல் தடவையாக திரைப்படம் பார்த்துள்ளேன். தமிழகத்தில் சென்னை மாதிரி தான் தூத்துக்குடி ரசிகர்களும் இருக்கின்றார்கள். திரைப்படம் நான்கு மடங்கு வெற்றி அடைந்துள்ளது.

‘பறந்து போ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஏழு கடல், ஏழு மலை’ படம் விரைவில் வெளியாகும். மேலும், பறந்து போ படத்தை ரசிகர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மேலும், படத்தில் மகனுக்காக தந்தையான நடிகர் சிவா சிகரெட் பழக்கத்தை விடுவார்., இந்த சீன் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. ஆம், என்னுடைய மகன் சொல்லி தான் நான் சிகரெட் அடிப்பதை நிறுத்தினேன் ஆகவே இந்த படத்தில் நான் வைத்துளேன் என்ற அவர், அதேபோன்று திரைப்படமும் தந்தை தாய் மகனுக்கு உண்டான திரைப்படம் என்று மகிழ்ச்சி அடைந்தார்.






